![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/08/pri-380x214.jpg)
ஆகஸ்ட் 24, மாஸ்கோ (World News): ரஷ்யாவின் சார்பாக உக்ரைனின் (Ukraine) மீது தாக்குதல் மேற்கொள்ள வாக்னர் எனும் கூலிப்படையை ரஷ்யா களமிறக்கியது. இந்த தனியார் ராணுவத்திற்கு பிரிகோஜின் தலைமை தாங்கினார். உக்ரைன் போரில் எதிர்பாராத திருப்பமாக வாக்னர் படை ரஷ்யாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றியது.
ஒரு கட்டத்தில் வாக்னர் படை தலைநகர் மாஸ்கோவை (Moscow) நோக்கி முன்னேறியது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் பிரிகோஜனிடம் மேற்கொள்ளப்பட்ட அமைதிப் பேச்சுவார்தைக்குப் பிறகு அவர் ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிரான கிளர்ச்சியை கைவிட்டார். JK Udampur Accident: பள்ளத்தில் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து; 3 பேர் துள்ளத்துடிக்க பரிதாப பலி.!
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் பிரிகோஜின் நேற்று பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் பத்து பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதே சமயத்தில் பிரிகோஜின் பயணம் செய்த விமானம் சுட்டு தாக்கப்பட்டதாகவும் வதந்திகள் பரவி வருகிறது.
வாக்னர் கலகம் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு நெருக்கடியாகவும் நேரடி சவாலாகவும் இருந்தது. ஜனாதிபதி புடின் மற்றும் அவரது நலன்களை எதிர்த்த பலரும் தெளிவற்ற முறையில் இறந்திருக்கின்றனர். இதில் வெளிப்படையான சில அரசியல் தலைவர்களும், ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவர்.