ஜனவரி 21, திருச்சூர், (World News): கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரண்டு வருடங்கள் ஆகியும் போரின் (Ukraine-Russia War) தீவிரம் குறையவில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் எல்லைக்குள் உக்ரைன் படைகள் நுழைந்ததாக தகவல் வெளியானது.
ரஷ்யா- உக்ரைன் போர்:
ரஷ்யாவின் குர்ஸ் பிராந்தியத்தில் (Kursk region) அமைந்துள்ள சட்ஜா நகரை (Sudzha town) தனது படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்து இருந்தார். இதனிடையே, உக்ரைனின் மத்திய பகுதியைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் போர் வீரர்கள் உள்பட 51 பேர் பலியாகினர். 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். சமீபத்தில், மாஸ்கோ மற்றும் ரஷ்யாவின் டொரோபெட்ஸில் உள்ள இராணுவ தளத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Police Encounter: தப்பியோட முயன்ற குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை.. பரபரப்பு சம்பவம்..!
கேரளவைச் சேர்ந்தவர் பலி:
இந்த போரில் கேரளாவின் திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரியை சேர்ந்த டி.பி.சுனில் என்பவர் உயிரிழந்தார். அவரது உறவினர் டி.கே.ஜெயின் படுகாயம் அடைந்தார். இதையடுத்து இருவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் திருச்சூரின் தையூரை சேர்ந்த சிபி ஓசெப், எர்ணாகுளத்தை சேர்ந்த சந்தீப் தாமஸ், சாலக்குடியை சேர்ந்த சுமேஷ் ஆன்டனி ஆகிய 3 பேரை காவல்துறையினர், உக்ரைன் போருக்கு ஆட்கள் தேர்வு உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர். இவர்களில் சிபி, சந்தீப் ஆகிய இருவரும் ரஷ்ய குடியுரிமை பெற்றுள்ளதாகவும் விசாவில் இந்தியா வந்ததாகவும் கூறியுள்ளனர். இதன் உண்மைத்தன்மையை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.