டிசம்பர் 15, ரஷ்யா (Russia): உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் (Russia-Ukraine war) ஆனது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கியது. இந்த போரானது இன்னும் சில மாதங்களில் 2 ஆண்டை நிறைவு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் ராணுவம் மற்றும் நிதியினைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அமெரிக்கா மட்டும் இதுவரை 111 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்கி, உக்ரைனுக்கு நிதி உதவி செய்துள்ளது. இது இந்திய மதிப்பில் 9 லட்சத்து 25 ஆயிரத்து 617 கோடியாகும். இருப்பினும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உக்ரைனைக் கொண்டுவர ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தற்போது சில தகவல்களை தெரிவித்துள்ளார். Tiruvallur Murder: நடுரோட்டில் இளைஞர் கொடூர கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் அம்பலம்: பெண் பரபரப்பு வாக்குமூலம்.!
தற்போது செய்தியாளர்களை சந்தித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியதாவது, "உக்ரைனில் ஏற்கனவே 6 லட்சத்து 17 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் முகாமிட்டுள்ளனர். எனவே கூடுதல் வீரர்களை திரட்டுவதற்கான அவசியம் ரஷ்யாவுக்கு இல்லை. எங்கள் நோக்கம் நிறைவேறும் வரை உக்ரைனில் அமைதி திரும்பாது" என்று கூறியுள்ளார். மேலும் அதிபராக கடந்த 24 ஆண்டுக்கு மேல் பதவி வகித்துவரும் புடின், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.