டிசம்பர் 15, திருவள்ளூர் (Tiruvallur): திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி நகரில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன் (வயது 27). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, இவருக்கு திருமணம் ஆன பிரியா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணிற்கு கோபாலகிருஷ்ணன் பல லட்சம் பணம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இருவர் இடையிலும் பல வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, பிரியா கூலி படையை அமைத்து, கோபாலகிருஷ்ணனை கொலை செய்துள்ளார். நடுரோட்டில் 4 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி ஓடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும் சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Vijay Hazare Trophy 2023: விஜய் ஹசாரே கோப்பை 2023... அரை இறுதியில் தமிழ்நாடு அணி தோல்வி..!
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்படி பிரியாவிடம் விசாரணை நடத்த சென்ற பொழுது, பிரியா தலைமறைவானது தெரிய வந்துள்ளது. பின் பல தேடலுக்குப் பிறகு பிரியாவை கைது செய்துள்ளனர். அப்போது அவர், தான் கூலிப்படையை ஏவி கோபாலகிருஷ்ணனை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் காவல்துறையினர் கொலை செய்த நான்கு பேர் கொண்ட கும்பலையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.