Ukraine President Volodymyr Zelensky (Photo Credit: ZelenskyyUa X)

ஜனவரி 03, கீவ் (World News): சோவியத் யூனியனின் ஒரு அங்கமாக இருந்து, அதன் வீழ்ச்சிக்கு பின்னர் தனி நாடாக உருவானது உக்ரைன். தற்போது ரஷிய அதிபராக செயல்பட்டு வரும் விளாடிமிர் புதின் (Vladmir Putin), ரஷ்யாவின் பிராந்திய பாதுகாப்பு கருதி உக்ரைனை தன்னுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதற்கு தன்னாட்சி அதிகாரம் அளிப்பதாகவும் கூறிய நிலையில், இந்த விஷயத்திற்கு உக்ரைன் மறுக்க தெரிவித்தது. மேலும், தன்னை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தலைமையிலான நேட்டோ நாடுகளின் அங்கமாகவும் முயற்சித்து வந்தது. அதற்காக அந்நாடுகளின் தலைவரையும் பலமுறை ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) நேரில் சந்தித்து வந்தார்.

679 நாட்களை கடந்து தொடரும் போர்: இதனால் எதிர்காலத்தில் ரஷ்யா தாக்கப்படும் பட்சத்தில், அதற்கு உக்ரைன் முக்கிய படைத்தளமாக இருக்கும் என்று கருதப்படுவதால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனை தன்னிடம் சரணடைய வற்புறுத்தினார். ரஷியாவின் பேச்சுக்களை கேட்காத உக்ரைன் தனது முடிவில் உறுதியாகவே இருக்கவே, அதிபர் புதினின் உத்தரவுப்படி ரஷ்ய இராணுவம் (Russia Ukraine War) உக்ரைனை தாக்கி வருகிறது. கடந்த 24 பிப்ரவரி 2022 தொடங்கிய இந்த போரானது, தற்போது 679 நாட்களைக் கடந்து நடந்து வருகிறது. முதலில் பல அதிரடியான தாக்குதலால் நிலைகுலைந்து போன உக்ரைன், பின் தனது சுய முயற்சி மற்றும் அமெரிக்காவின் உதவி காரணமாக பதில் தாக்குதலை மேற்கொண்டது.

கடந்த ஒரு வாரமாக மீண்டும் உச்சம்பெறும் போர்: தற்போது வரை இந்த போரில் இருதரப்பிலும் உயிர் சேதங்கள், இராணுவ தளவாடம் போன்ற பொருள் சேதங்கள் அதிகம் இருக்கின்றன. கடந்த சில மாதங்களாக உக்ரைன் போர் பதற்றம் குறைந்திருந்த நிலையில், டிசம்பர் 29, 2023 ஆம் தேதி முதல் போரின் வீரியம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் இருக்கும் கட்டிடங்களை குறிவைத்து பல்முனை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதேபோல, ஏவுகணைகளும் ஒரு நாள் ஒன்றுக்கு 200க்கும் அதிகமாக ஏவப்பட்டு இருந்தது. இதனால் மீண்டும் போர் உச்சம் பெற்றதாக தெரியவருகிறது. Hamas Leader Killed: இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் பலி; தொடரும் யுத்தம்.! 

பதில் தாக்குதலை தொடருவோம்: இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, நாட்டு மக்களிடையே உரையாற்றி இருக்கிறார். அந்த உரையில், "கடந்த டிசம்பர் 29 முதல் தற்போது வரை சில நாட்களில் ரஷ்யா 300-க்கும் அதிகமான ஏவுகணை, 200க்கும் அதிகமான ட்ரோன் ஆகியவற்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது. இவற்றில் பாலிஸ்டிக் ஏவுகணையும் அடங்கும். நமது விமான பணியில் இருக்கும் ஒவ்வொரு போர்வீரரும், உலக அளவில் இருந்து வழங்கப்படும் சிறப்பான ஆயுதங்களை பயன்படுத்தி பதில் தாக்குதல் மேற்கொள்கின்றனர்.

ஐரோப்பா வரை ரஷிய பயங்கரவாதம் பரவும்: ஒவ்வொரு வான்வழி பாதுகாப்பு வீரரும், நமது உயிர்களை காப்பாற்றுகிறார். ஜனநாயகம் அனைத்து வகையான பயங்கரவாதத்தில் இருந்தும் உயிர்களை பாதுகாக்கும் திறன் கொண்டது என்பதை நாம் கட்டாயம் நிரூபிக்க வேண்டும். நாம் இப்போது அந்தப் பணியை உக்ரைனில் செய்ய தவறினால், ரஷ்யாவின் பயங்கரவாதம் என்பது ஐரோப்பா மற்றும் அதற்கு மேலும் பரவும். பல தசாப்தங்களாக கட்டுப்பாடு இல்லாத அதிகாரத்தால் உருவாக்கப்பட்டுள்ள ரஷ்ய தலைமையின் உணர்வு என்பது, ஏற்கனவே பல துன்பங்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திவிட்டது. உயிரை பறிக்கும் பொறுப்பு அவர்களை பாதுகாப்பவர்களின் சக்தி ஆகியவற்றை ரஷ்யா எதிர்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.