LGBT (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 26, பாங்காக் (World News): புன்னகை நாடு என்று அழைக்கப்படும் தாய்லாந்தில் (Thailand) எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திருமணம் செய்தால் அவர்களுக்கு சம உரிமைகள் வழங்க வகை செய்யும் திருமண சமத்துவ மசோதா (Same Sex Marriage), நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, மொத்தம் உள்ள 415 உறுப்பினர்களில் 400 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. US President Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் 2024.. கமலா ஹாரிஸின் அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு..!

ஓரின சேர்க்கையாளர் திருமணம்: இதையடுத்து, நிறைவேற்றப்பட்ட மசோதா செனட் அவைக்கும் அதன் பிறகு ராஜ்ய ஒப்புதலுக்கு மன்னருக்கும் அனுப்பப்பட்டது. பெரும்பாலும் கீழ் சபையில் நிறைவேற்றப்படும் சட்டத்திருத்தத்தை செனட் சபை ஏற்றுக்கொள்ளும் என்பதால், இந்த சட்ட மசோதாவும் செனட் சபையில் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மன்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மன்னர் ஒப்புதல் அளித்துள்ளதால் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்படி இச்சட்டம் வருகிற ஜனவரி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிய அளவில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாடுகளில் தைவான் மற்றும் நேபாளத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது நாடாக தாய்லாந்து மாறியுள்ளது. இத்தகவல் தன்பாலின ஈர்ப்பாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.