Shooting at Tor Kor Market in Thailand (Photo Credit: @geotechwar X)

ஜூலை 28, பாங்காக் (World News): தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் (Bangkok), டோர் கோர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. பரபரப்பான இந்த மார்க்கெட்டில் வழக்கம் போல மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த மர்மநபர் ஒருவர், பாதுகாவலர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், 4 பாதுகாவலர்கள் மற்றும் பெண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். Child Death: உணவு வாங்க சென்ற தந்தை.. காரில் மூச்சுமுட்டி உயிரிழந்த 3 வயது குழந்தை.!

துப்பாக்கிச் சூடு:

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த மர்மநபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரது இந்த பயங்கரமான துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: