Sarath Fonseka (Photo Credit: @the_hindu X)

ஜூலை 29, கொழும்பு (World News): கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஏற்பட்டது. அதற்கு பொறுப்பேற்று, கோத்தபய ராஜபட்ச அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். இந்த நிலையில், அவரின் பதவிக்காலம் இந்தாண்டு முடிவடைகிறது. இதனையொட்டி அதிபர் தேர்தலுக்கான (Sri Lanka Presidential Election) தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இலங்கை அதிபர் தேர்தல்: அதன்படி இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் 225 இடங்கள் உள்ளன. அதில் 196 பேர் தேர்தல் மூலமாகவும், 29 பேர் தேசியப் பட்டியல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர். Chinese Man Suffers From Cough: தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்த சீனர்; மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி..!

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இலங்கை முன்னாள் ராணுவ தளபதியும் எம்.பி.யுமான சரத் பொன்சேகா () சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “கடந்த 76 ஆண்டுகளாக ஊழல் கட்சிகள் இலங்கையை ஆட்சி செய்து மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தின. ஊழலை வேரறுக்க வேண்டும். இதற்காக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.