PM Shehbaz Sharif (Photo Credit: @Reuters X)

மார்ச் 04, இஸ்லாமாபாத் (Islamabad): கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் (Pakistan) பிரதமராக இருந்த இம்ரான்கானின் ஆட்சியின் போது, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில், இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை அடுத்து, அவர் பிரதமர் பதவியை இழந்தார். மேலும், ஊழல் முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஷ் ஷெரீப் (Shehbaz Sharif) இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து  2 ஆண்டுகள் பதவி வகித்தார். Robin Minz Meets With An Accident: சாலை விபத்தில் சிக்கிய இளம் ஐபிஎல் கிரிக்கெட் வீரர்.. சோகத்தில் குஜராத் டைட்டன்ஸ்..!

இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் ஆனது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. அதற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் 92 வாக்குகள் பெற்ற நிலையில், ஷெபாஷ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதையடுத்து இரண்டாவது முறையாக அவர் பாகிஸ்தான் பிரதமராகியுள்ளார். இன்று அவர் பதவி ஏற்கிறார்.