பிப்ரவரி 06, புதுடெல்லி (New Delhi): ஸ்னாப்சாட் (Snapchat) என்பது மொபைல் ஆப் ஆகும். இந்த ஆப் மூலம் யூசர்கள் தங்களது, புகைப்படங்களையும், காணொளிகளையும் நண்பர்களுக்கு அனுப்பலாம். இவர்கள் அனுப்பிய படங்களும், கணொளிகளும் ஸ்னாப் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் டிஜிட்டல் விளம்பரச் சந்தையின் சவாலைச் சமாளிக்கும் முயற்சியாக, ஸ்னாப்சாட் நிறுவனம் அதன் மொத்த உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 500 ஊழியர்கள் வேலை இழக்க உள்ளனர். Rajisha Vijayan Marriage: கர்ணன் பட ஹீரோயினுக்கு திருமணம்.. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!
ஸ்னாப்சாட் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வது இது முதல் முறை அல்ல. 2022 இல், இந்நிறுவனம் அதன் ஊழியர்களில் 20 சதவீதம் பேரை வேலைநீக்கம் செய்தது. 2023ஆம் ஆண்டிலும் 3 சதவீதம் ஊழியர்களை வேலைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.