செப்டம்பர் 11, சியோல் (World News): தென் கொரியாவில் கடந்த 3 ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் (Child Birth Rate) குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான அறிக்கையில், ஒரு பெண்ணின் இனப்பெருக்க வாழ்க்கையில் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டில், 100 பெண்களுக்கு 0.78 ஆகும். அதாவது, 78 குழந்தைகள் என்ற விகிதத்தை கொரியா புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கை 2023-ஆம் ஆண்டு 0.72 ஆகக் குறைந்துள்ளது. மேலும், தொடர்ந்து 2024-யில் 0.68 ஆக உள்ளது. US Presidential Election 2024: கமலா ஹாரிஸ் - டொனால்ட் ட்ரம்ப் இடையே காரசாரமாக நடந்த விவாதம்; பரஸ்பர பரபரப்பு குற்றச்சாட்டு.! முழு விபரம் இதோ.!
உலகின் மிகக் குறைந்த குழந்தை பிறப்பு விகிதத்தை கொண்ட நாடுகளில் தென்கொரியா இடம்பெற்றுள்ளது. அந்நாட்டில், பெரும்பாலானோர் வீட்டில் குழந்தைகளை விட செல்லப்பிராணிகளே (Pets) இருக்கின்றன. குழந்தைகளுக்கு செய்யும் செலவுகளை விடவும் செல்லப்பிராணிகளுக்கு அதிகம் செலவாகிறது. குழந்தைகளை வைத்து கூட்டிச் செல்லும் வண்டியில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தும் நோக்கில், தென் கொரியா அதிபர் யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.