Donald Trump | Kamala Harris (Photo Credit: @Popcrave X)

செப்டம்பர் 11, நியூயார்க் (World News): அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 05ம் தேதி அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸும் (Kamala Harris), குடியரசுக்கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் (Donald Trump), நேற்று நியூயார்க் நகரில் என்.பி.சி செய்தி நிறுவனம் சார்பில் நிபந்தனையுடன் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நேருக்கு நேர் விவாதத்தில் கலந்துகொண்டனர். அப்போது, இருவரும் அனல்பறக்க தங்களின் கருத்துக்களை முன்வைத்து பிரச்சாரத்தை முன்னெடுத்து இருந்தனர்.

விவாதத்தில் விதிமுறைகள்:

கடத்த ஜூன் 27ம் தேதி சிஎன்என் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ட்ரம்ப் - பைடன் இடையேயான விவாதம் பெரும் சர்ச்சையை சந்தித்த நிலையில், நேற்று நடைபெற்ற டொனால்ட் ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் இடையேயான விவாதத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டன. அதன்படி, நேரலை நிகழ்ச்சி பெற்ற இடத்தில் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. நிகழ்ச்சி தொகுப்பாளர், கேமிரா பணியாளர்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தனர். முன்னதாகவே எழுதி வரப்பட்ட காகிதத்திற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இருவரும் பேனா, பேப்பர், தண்ணீர் கேன் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்ட்டனர். வேட்பாளர் ஒருவர் பேசினால், அவர் பேசும்போது மட்டுமே மைக் ஆனில் இருக்கும். மறுமுறை அவர் தனது வாய்ப்புக்காக அமைதியாக காத்திருக்க வேண்டும். தொகுப்பாளர் மட்டுமே கேள்விகளை கேட்க முடியும். விவாதம் இறுதியாக நடைபெற்று முடிவதாக அறிவிக்கப்படும்வரையில், இருவரும் மேடையில் இருக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டு இருந்தன. 2016 அதிபர் தேர்தலுக்கு பின்னர், இரண்டு அதிபர் வேட்பாளர்கள் முதல் முறையாக நேற்று பரஸ்பரம் கைகுலுக்கி விவாதங்களை தொடங்கி இருந்தனர். Lunar Nuclear Power Plant: நிலவில் அணுமின் நிலையம்.. ரஷ்யாவுடன் கைகோர்க்கும் இந்தியா, சீனா..!

கமலா ஹாரிஸ் பேச்சு:

அமெரிக்காவை முன்னேற்றுவோம் என தொடங்கிய விவாதத்தில், கமலா ஹாரிஸ் பேசியபோது, "ட்ரம்ப் தனது பதவியை விட்டு விலகிய சமயத்தில், பொருளாதாரம் மற்றும் ஜனநாயக நிலை கடுமையான வீழ்ச்சியில் இருந்தது. கொரோனா தொற்று நாட்டினை சீரழித்தது. டிரம்ப் அதிபராக வந்தால், அவர் தேசிய அளவில் கருக்கலைப்பு விவகாரத்தை அறிமுகம் செய்வார். ஒரு பெண்ணாக கருக்கலைப்பு விவகாரத்தில் முடிவெடுக்கும் திறன் என்பது பெண்ணுக்கு உள்ளது. அதனை அவர் மாற்ற முயற்சி செய்வார். ட்ரம்ப் ஆட்சியில் இருக்கும்போது தான், பொருளாதார தடைகளை அமல்படுத்தி இருந்தார். டிரம்ப் பல்வேறு பொருட்களுக்கு வரிகளை விதிப்பார்" என பேசினார்.

டிரம்ப் பேச்சு:

டொனால்ட் டிரம்ப் பேசுகையில், "ஜோ பைடனின் தவறான நிர்வாக தத்துவத்தை கமலா ஹாரிஸும் ஏற்றுக்கொண்டுள்ளார். நான் எந்த கருக்கலைப்பு திட்டத்திலும் கையெழுத்திடவில்லை. மகனங்களிடம் அதுகுறித்த அதிகாரம் இருக்க வேண்டும். நான் ஆட்சியில் இருந்தபோது சீனா, வடகொரியா ஆகிய நாடுகள் அமெரிக்காவை பார்த்து பதறி இருந்தன. கமலா ஹாரிஸ் மார்க்சிஸ்ட் (சித்தாந்த ரீதியாக) என்பது அனைவருக்கும் தெரியும். பைடன் ஆட்சியில் புலம்பெயர்ந்தோர் அமெரிக்கர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறார்கள். சட்டவிரோதமாக எல்லைதாண்டி வந்து அச்சுறுத்துகிறார்கள்" என பேசினார்.

ரஷியாவின் நிலைப்பாடு:

அதிபர் வேட்பாளர்கள் இருவரும் தொடர்ந்து தங்களது நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து காரசாரமாக விவாதம் செய்தனர். எதிர்வரும் அமெரிக்கா அதிபருக்கான தேர்தலில், இருவரில் யார் வெற்றிபெறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலகளவில் எழுந்து இருக்கிறது. உக்ரைன் போரை முன்னெடுத்து வரும் ரஷியா, அமெரிக்காவில் கமலா ஹாரிஸ் அதிபராக தேர்வு செய்யப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே நடந்த விவாதத்தின் காணொளி: