New Zealand Parliament (Photo Credit: Instagram)

நவம்பர் 15, வெலிங்டன் (World News): நியூசிலாந்தின் 170 ஆண்டு கால வரலாற்றில், 21 வயதான ஹனா ரவ்ஹிதி மைபி கிளார்க் என்ற இளம் பெண் எம்.பி ஆகி வரலாறு படைத்துள்ளார். மாவோரி இனத்தைச் சேர்ந்த இவரது குடும்பம் 3 தலைமுறைகளுக்கு மேல் அரசியலில் உள்ளது. இந்நிலையில், நியூசிலாந்து அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்டு வருவதற்காக நியூசிலாந்து ஆளும் கூட்டணியில் ACT கட்சி முன்மொழிவை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் (Parliament) வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்தது. Job Alert: சவூதி அரேபியாவில் டிரைலர் டிரைவர், போர்க்ளிப்ட் ஆபரேட்டர் தேவை; நல்ல சம்பளம்.. விபரம் உள்ளே.!

அப்போது, நியூசிலாந்து நாட்டின் பூர்வ குடிகளான மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் எம்பி, ஹக்கா எனப்படும் மாவோரிகளின் நடனம் ஆடி மற்றும் மாவோரி பாடல் பாடி எதிர்ப்பு தெரிவித்தது, நாடு முழுவதும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைதாங்கி ஒப்பந்தம், 1840-ல் பிரிட்டன் அரசு பிரதிநிதிகளுக்கும், பூர்வக்குடிகளாக அறியப்படும் மாவோரி தலைவர்களுக்கும் இடையே ‘வைதாங்கி ஒப்பந்தம்’ (Treaty of Waitangi) மேற்கொள்ளப்பட்டது. இது மாவோரி களுக்கு சில சலுகைகளும், உரிமைகளையும் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பழங்குடியின பெண் எம்.பி. நடனம் ஆடி எதிர்ப்பு: