Harini Amarasuriya (Photo Credit: @ANIDigital X)

நவம்பர் 18, கொழும்பு (World News): கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஏற்பட்டது. அதற்கு பொறுப்பேற்று, கோத்தபய ராஜபட்ச அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். பின்னர் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. Israel PM Benjamin Netanyahu: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.. காரணம் என்ன?!

அதில், தேசிய மக்கள் சக்தி (National People's Power Party) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று அதிபரானார். அனுராவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு 3 எம்.பிக்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய சட்டங்களை நிறைவேற்ற பெரும்பான்மை பலம் வேண்டும் என்பதால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் (Sri Lanka Parliamentary Elections) நவம்பர் 14-ம் தேதி நடைபெற்றது.

தேர்தலில், பெரும்பான்மைக்கு தேவையான 123 இடங்களை அக்கூட்டணி ‌கட்சிகள் கைப்பற்றியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி 31 இடங்களை பிடித்து 2வது இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையை அதிபர் திசநாயகா (Sri Lankan President Anura Kumara Dissanayake) இன்று அறிவிப்பதாக தேசிய மக்கள் சக்தி கூட்டணி அறிவித்திருந்தது. இதன்படி பிரதமராக ஹரினி அமர சூரியாபை (Harini Amarasuriya) அதிபர் திசநாயக அறிவித்தார். தொடர்ந்து அவர் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவர்க்கு உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.