ஜூன் 23, வாஷிங்க்டன் டி.சி (Washington DC): அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மரபுப்படி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜோ பைடன் (Joe Biden) மற்றும் அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அங்கு இருநாட்டு தலைவர்களும் உயர்மட்ட ஆலோசனையும் நடத்தினர்.
அமெரிக்காவில் இருக்கும் பெருநிறுவனங்களின் முதன்மை நிர்வாகிகளும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, இந்தியாவில் மேற்படி தொழில் முதலீடுகளை வழங்கவும் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர். Autograph from PM Modi: இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் போட்டிபோட்டு ஆட்டோகிராப் வாங்கி செல்பி எடுத்த அமெரிக்க காங்கிரசர்கள்.. இந்தியர்களுக்கே பெருமிதம்.!
Reliance Industries chairman Mukesh Ambani and Reliance Foundation Chairperson, Nita Ambani along with Alphabet CEO, Sunder Pichai & Anjali Pichai at the State Dinner in the White House.
US President Joe Biden and First Lady Jill Biden hosted this special event at an elaborately… pic.twitter.com/YwYCSVZUiY
— ANI (@ANI) June 23, 2023
இந்த நிலையில், வாஷிங்க்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் (White House, Washington DC) பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) வருகையையொட்டி, முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அதிபர் ஜோ பைடன் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜோ பைடன், இந்திய-அமெரிக்கா வாழ் மக்களில் முக்கியமானவர்கள், தொழிலதிபர்கள், உலக செல்வந்தர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை (Sunder Pichai) அவரின் மனைவி அஞ்சலி பிச்சை (Anjali Pichai), ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) மற்றும் அவரின் மனைவி நீதா அம்பானி (Nita Ambani) ஆகியோர் நேரில் சந்தித்து உரையாடினார். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.