![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1718877587LGBT-380x214.jpg)
ஜூன் 20, பாங்காக் (World News): புன்னகை நாடு என்று அழைக்கப்படும் தாய்லாந்தில் (Thailand) எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திருமணம் செய்தால் அவர்களுக்கு சம உரிமைகள் வழங்க வகை செய்யும் திருமண சமத்துவ மசோதா (Same Sex Marriage), நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில், மொத்தம் உள்ள 415 உறுப்பினர்களில் 400 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. Best Laptops in India: இந்தியாவின் சிறந்த 10 லேப்டாப்கள்.. லேப்டாப் வாங்க போறீங்களா.? இதை பார்த்துட்டு போங்க..!
இதையடுத்து, நிறைவேற்றப்பட்ட மசோதா செனட் அவைக்கும் அதன் பிறகு ராஜ்ய ஒப்புதலுக்கு மன்னருக்கும் அனுப்பப்பட்டது. பெரும்பாலும் கீழ் சபையில் நிறைவேற்றப்படும் சட்டத்திருத்தத்தை செனட் சபை ஏற்றுக்கொள்ளும் என்பதால், இந்த சட்ட மசோதாவும் செனட் சபையில் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நிறைவேற்றப்பட்டு, மன்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் மன்னர் ஒப்புதலுடன் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வகை சட்டத்துக்கு அனுமதி அளித்துள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து சாதனை படைத்துள்ளது.