Nobel Prize 2025 Physiology or Medicine (Photo Credit: @NobelPrize X)

அக்டோபர் 06, ஸ்வீடன் (World News): உலகின் மிகவும் மதிப்புமிக்க நோபல் பரிசு சீசன் இன்று (அக்டோபர் 06) தொடங்கியது. 2025ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு (2025 Nobel Prize) இன்று அறிவிக்கப்பட்டது. அடுத்த 7 நாட்களில், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் பரிசு பெற்றவர்களின் பட்டியல் ஸ்டாக்ஹோம் மற்றும் ஒஸ்லோவில் இருந்து வெளியிடப்படும். Russian President Vladimir Putin India Visit: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருவது உறுதி..!

மருத்துவத்துறை நோபல் பரிசு 2025:

2025ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத் துறை நோபல் பரிசு, மேரி இ. பிரன்கோவ் (Mary Brunkow), பிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), மற்றும் ஷிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi) ஆகியோருக்கு கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் அமைப்பு அறிவித்துள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தி குறித்த கண்டுபிடிப்புகளுக்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, நாளை இயற்பியலுக்கும், நாளை மறுநாள் வேதியியலுக்கும், அக்டோபர் 09 வியாழக்கிழமை இலக்கியத்திற்கும் அறிவிக்கப்படும். தொடர்ந்து, அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10), பொருளாதாரத்திற்கான ஆல்பிரட் நோபல் நினைவுப் பரிசு, வரும் அக்டோபர் 13ஆம் தேதி அறிவிக்கப்படும். ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான, டிசம்பர் 10ஆம் தேதி அதிகாரப்பூர்வ விருது வழங்கும் விழா நடைபெறும்.

நோபல் பரிசு 2025: