Pakistan-Afghanistan Border War (Photo Credit: @MarioNawfal X)

டிசம்பர் 31, காபூல் (World News): பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான் வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் (Pakistan-Afghanistan) இடையே எல்லை பிரச்சனை இருந்துள்ளது. இதன்காரணமாக, எல்லை பகுதிகளில் இரு நாடுகளின் ராணுவ வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. தற்போது, இரு நாட்டு எல்லைப்பகுதியான கோஸ்காரி, கோட் ரகா, தாரி மெங்கல், மதா சன்கர் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தலிபான் வீரர்களுக்கு இடையே தொடர்ந்து கடும் தாக்குதல் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. H1B Visa: எச்1பி விசா நடைமுறையில் புதிய மாற்றம்; புதிய படிவத்தை வெளியிட்டது அமெரிக்கா அரசு.!

எல்லை பிரச்சனை:

எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக குற்றம் சாட்டி வரும் பாகிஸ்தான் ராணுவம் கடந்த டிசம்பர் 24, 26 ஆகிய தேதிகளில் ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாண பகுதிகளில் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 46 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக கடந்த டிசம்பர் 28ஆம் தேதி தலிபான் வீரர்கள், பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து, மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர். பாகிஸ்தான் எல்லைக்குள் (Border War) அத்துமீறி நுழைந்த தலிபான்கள், ராணுவ நிலைகளை தீ வைத்து எரித்தனர். இதில், 19-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்தனர்.