டிசம்பர் 30, வாஷிங்க்டன் டிசி (World News): உலகிலேயே மிகப்பெரிய, தலைசிறந்த வல்லரசு நாடுகளில் ஒன்றாக கருதப்படும் அமெரிக்காவில் வேலை பார்த்து, பின் அங்கேயே குடியேறிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பிற நாட்டவர்கள் பல நூறாண்டுகளாக முயன்று வருகின்றனர். இந்தியர்கள், சீனர்கள் என பல்வேறு நாட்ட்டவர்களும் எச்-1பி விசாவுக்கு விண்ணப்பித்து வைத்து இருக்கின்றனர். கல்வி, வேலை என முக்கிய விஷயங்களுக்கு எச்-1பி விசா (H1B Visa Application) அமெரிக்காவில் நுழைய முக்கிய விஷயமாக இருக்கிறது. கடந்த காலங்களில் எச்-1பி விசா நடைமுறை எளிமையாக இருந்த நிலையில், அமெரிக்கா அரசு அந்நாட்டின் எதிர்காலம் கருதி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக மெக்சிகோ எல்லை வழியே அனுமதியின்றி, சட்டவிரோதமாக அந்நாட்டில் குடியேறும் நபர்கள், அந்நாட்டின் சட்டம்-ஒழுங்கில் இருந்து பல்வேறு விஷயங்களுக்கும் பெரும் தலைவலியாக அமைவதால், அமெரிக்கா அரசு ஒவ்வொரு விஷயங்களையும் கவனமாக கையாண்டு வருகிறது. Israel Strikes In Yemen: ஏமன் விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. நூலிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார நிறுவனத் தலைவர்..!
எச்1பி விசா - புதிய படிவம்:
அதன்படி, அமெரிக்காவில் ஜனவரி மாதம் முதல் அதிபர் பொறுப்பு ஜோ பைடனிடம் இருந்து டொனால்ட் ட்ரம்ப் கைகளுக்கு மாறுகிறது. ஜோ பைடன் தலைமையிலான அரசு உலக நாடுகளின் போருக்கு பல்வேறு உதவிகளை செய்து, மக்களின் வரிப்பணத்தை வீணாகி வருவதாக ஏற்கனவே டிரம்ப் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் உலகளவில் பல மாற்றங்கள் வரும், அமெரிக்க படைகள் மீண்டும் நாடுகளுக்கு திரும்பி அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, முன்னதாக ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றபோது எச்-1பி விசா வழங்கும் நடவடிக்கையில் பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. இதனிடையே, தற்போது எச்-1பி விசா படிவம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17, 2025 முதல், எச்-1பி விசா நடைமுறைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் புதிய படிவத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்த மனுவை ஜனவரி 17 முதல் பயன்படுத்தாத பட்சத்தில், அவ்விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்படும். தற்போது வரை எச்-1பி விசா படிவம் I-129 ஐ பயன்படுத்தி சமர்ப்பிக்கப்படும் நிலையில், ஜனவரி 17ல் இருந்து எச்-2025பி நடைமுறையை தேர்வு செய்ய வேண்டும்.
ஜனவரி 17 க்கு மேல் பழைய விண்ணப்பங்கள் ஏற்கப்படாது:
எச்-1பி, எச்2 விசாக்களில் புலம்பெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் அல்லாத தொழிலாளர்களுக்கான சிறப்பு திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. குடியேற்றம் இல்லாத, சிறப்பு தொழில்கள் என வகைப்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு எச்-1பி விசா தற்காலிக பணியமர்தலுக்காக வழங்கப்படுகிறது. இதற்காக ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை, மேற்படிப்பு ஆகிய தகுதிகள் தேவை. மேலும், தொழில்நுட்பம், மென்பொருள், பொறியியல், சுகாதாரம், கல்வி, வணிக சேவைகளுக்கும் எச்-1பி விசா பயன்படுத்தப்படுகிறது. படிவம் I-129 புதுப்பிக்கப்பட்ட பாதிப்பு, முன்னதாக வழங்கப்பட்டு வந்த சேவையை மாற்றும். முந்தைய பதிப்புகளையும் நிராகரிக்கும்.
H-1B, H-2A, H-2B, H-3 விசா நடைமுறைகள்: தற்காலிக பயிற்சியாளர்கள், தொழிலாளர்கள்
L-1: உள் நிறுவன மாற்றுத்திறனாளிகள்
O-1, O-2: மாற்றுத்திறன் / உடல்நலக்குறைவு கொண்ட நபர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள்.
P பிரிவுகள்: விளையாட்டு வீரர்கள், பொழுதுபோக்கு கலைஞர்கள், பிற கலைஞர்கள்
Q-1, R-1: கலாச்சார பரிமாற்ற பார்வையாளர்கள் மற்றும் மதகுருமார்கள் / மதப் பணியாளர்கள்
E-1, E-2, E-3, H-1B1 மற்றும் TN பிரிவுகளில் இருப்பவர்கள் மாற்றங்களைக் கோர மனுதாரர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம்.
விசா நடவடிக்கைக்கு விண்ணப்பிப்போர், ஜனவரி 17 க்கு மேல் கட்டாயம் புதிய படிவத்தை பயன்படுத்த வேண்டும். மாறாக பழைய படிவம் பெறப்பட்டால், அவை நிராகரிப்பு செய்யப்படும் எனவும் அமெரிக்க அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவுக்காலம் என்பது 14 நாட்கள் வரை நீடிக்கும் நிலையில், தகுதியான நபர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர், தேர்வு செய்யப்படும் நபர்கள் எச்1 பி கேப்-சப்ஜெக்ட் மனுக்களை தாக்கல் செய்யும் முயற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.