மே 16, ஒட்டாவா (World News): கனடாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள அல்பெர்டாவில் திடீரென நேற்று காட்டுத்தீ (Wild Fire) பரவியது. பலமாக காற்று வீசியதால், காட்டுத்தீ அதிவேகமாக பரவி காடு பற்றிக்கொண்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், ஹெலிகாப்டர்கள் மூலமாக வேகமாக பரவிக்கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றனர். Onion Powder Pajji Recipe: மழைக்கு இதமாக சுடச்சுட சுவையான வெங்காயத்தூள் பஜ்ஜி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
மேலும், இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனப்பகுதி அருகில் அமைந்துள்ள பீகன் ஹில், பிரேரி கிரீக் மற்றும் அபசன்ட் ஆகிய நகரங்களில் வசித்து வரும் சுமார் 6,000 பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதன்காரணமாக, பொதுமக்கள் அதிகமான அளவில் சாலைகளில் முண்டியடித்து கொண்டு சென்றதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், இதில் சிலர் காயமடைந்தனர்.