ஆகஸ்ட் 02, திருச்சி (Trichy News): தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது. அதை அடுத்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டது. இதனை அடுத்து கொள்ளிடம் ஆற்று பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் இருந்த மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் நேற்று தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து வந்த நிலையில் கொள்ளிடம் ஆற்று பாலத்தின் கீழ் ஒருவர் தண்ணீரில் சிக்கிக் கொண்டிருந்ததை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் 56 வயதான சசிக்குமார் என தெரியவந்துள்ளது. கூலித் தொழிலாளியான சசிக்குமார் தினமும், வேலை முடிந்ததும் மது அருந்திவிட்டு கொள்ளிடம் பாலத்தின் கீழ் படுப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். Alien Temple In Salem: ஏலியனுக்கு கோவில் கட்டி அலப்பறை செய்யும் நபர்.. சேலத்தில் பரபரப்பு..!
தண்ணீர் வரத்து அதிகரிப்பது பற்றி அறியாமல் நேற்றும் படுத்துள்ளார். காலையில் விழித்தபோதுதான் தன்னை சுற்றி தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, அவர் கூச்சலிட்ட நிலையில் தான் அப்பகுதிக்கு சென்றவர்கள் பார்த்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் சொல்லி மீட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
#KollidamBridge on the #Trichy-Chennai National Highway was rescued by Srirangam fire and rescue services personnel.
Details here 🔗 https://t.co/0T2NirjKRv
📸 @dkarthikTOI#Trichy #TrichyChennaiHIghway pic.twitter.com/I8TAOUXnRz
— The Times Of India (@timesofindia) August 1, 2024