![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/images/2024/12/who-chief-tedros-adhanom-ghebreyesus.jpg?width=380&height=214)
டிசம்பர் 27, ஏமன் (World News): ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் காசாவை உருகுலைத்த இஸ்ரேல் (Israel), ஹமாஸ் ஆதரவு நாடுகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்து ஏமன் தலைநகர் சனாவில், சுமார் 10 ஆயிரம் பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. ஏமனில் உள்ள கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு, தற்போது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் (Israel Strikes) கொடுத்து வருகிறது. US Govt Condolences: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு; அமெரிக்கா அரசு இரங்கல்.!
இஸ்ரேல் பதிலடி தாக்குதல்:
இஸ்ரேலின் இந்தக் கொடூர தாக்குததால் சனா விமான நிலையம் (Sana Airport) முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும், 3 துறைமுகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலால் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நூலிழையில் உயிர்தப்பிய தலைவர்:
ஏமனில் தாக்குதல் நடத்த போர் விமானங்கள் கிளம்பி சென்ற காட்சிகளை இஸ்ரேல் தற்போது வெளியிட்டுள்ளது. விமான நிலையத்தின் தாக்குதலின் போது விமானத்தில் ஏறவிருந்த, உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம் (Dr Tedros Adhanom Ghebreyesus) நூலிழையில் உயிர்தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, தாம் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்களது பணி முடியும் வரை இந்த தாக்குதல் தொடரும் என கூறியுள்ளார். மேலும், ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் இருக்கும் கிளர்ச்சியாளர்கள் வீழ்த்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.