US Flag | Manmohan Singh (Photo Credit: Pixabay / Facebook)

டிசம்பர் 27, வாஷிங்க்டன் டிசி (World News): முன்னாள் இந்திய பிரதமர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மன்மோகன் சிங் (Manmohan Singh), தனது 92 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து அவர் கடந்த பல வருடங்களாகவே ஒதுங்கி இருந்த நிலையில், இயற்கை எய்தியுள்ளார். மன்மோகன் சிங்கின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ள மத்திய அரசு, 7 நாட்கள் துக்கம் அனுசரிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. மேலும், இன்று மத்திய அமைச்சரவையும் முன்னாள் பிரதமருக்கு இரங்கல் தெரிவிக்க கூடுகிறது. அதேபோல, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். உலகளவில் இருந்தும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சார்பில், அமெரிக்கா அரசு இரங்கல்:

இந்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்க்டன் (US Secretary of State Antony Blinken) வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், "முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மறைவால், இந்திய மக்களுக்கு அமெரிக்கா தனது இரங்கலை தெரிவிக்கிறது. இந்தியா - அமெரிக்காவின் நட்புறவு, கூட்டாண்மையில் மிகசிறந்த சக்தியாக மன்மோகன் சிங் விலகினார். கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா - இந்தியா இணைந்து பல சாதனைகளை செய்ய காரணமாக அமைந்தது அவர்தான். இருநாடுகளுக்கு இடையேயான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முன்னெடுப்பதில், மிகப்பெரிய பங்களிப்பை மன்மோகன் சிங் ஏற்படுத்தி இருந்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தூண்ட, மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்தார். மன்மோகன் சிங்கின் மறைவுக்கு நாங்கள் இரங்கல் தவிக்கிறோம். அவரின் அர்ப்பணிப்பு எப்போதும் எங்களின் நினைவில் இருக்கும்" என தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசின் வெள்ளை மாளிகை இரங்கல்: