Virus (Photo Credit: Pixabay)

ஜனவரி 03, பெய்ஜிங் (World News): கடந்த 2019ஆம் ஆண்டில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை உண்டாக்கியது. கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கத்தால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், சீனாவில் (China) மீண்டும் ஒரு வைரஸ் பரவி மக்களைப் பாதிப்படைய செய்கிறது. இது HMPV (Human Metapneumo Virus) என்ற வைரஸால் சுவாச நோய் அங்கு வேகமாகப் பரவி வருகின்றது. கோவிட்-19 அறிகுறிகளைப் போலவே இந்த வைரஸ் இருப்பதாகக் கூறப்படுகிறது. Swiss Burqa Ban: சுவிட்சர்லாந்தில் 'புர்கா' அணிய தடை; அமலுக்கு வந்த புதிய சட்டம்..!

புதிய வைரஸ்:

இது, குறிப்பாக 14 வயதுக்குட்பட்டவர்களை அதிகளவில் தாக்குவதாகக் கூறப்படுகிறது. இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். இந்த வைரஸ் பாதித்த நோயாளிகள் மருத்துவமனைகளில் குவிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே, சீனாவில் உள்ள பல மருத்துவமனைகள் இன்ஃப்ளூயன்ஸா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட் -19 நோயாளிகளால் நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, மருத்துவமனைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்: