UN Security Council (Photo Credit: wikipedia)

மார்ச் 26, நியூயார்க் (World News): இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் (Israel Hamas War) கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இதனால், காசா பகுதியில் மனித நேய அடிப்படையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்யவேண்டி ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. College Student Sexual Harassment: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் – பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி..!

இதுதொடர்பாக, ஐ.நா. பொது சபையில் ஜோர்டான் வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ரமலான் பண்டிகையை கருத்தில் கொண்டு 'காசா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்' என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு 14 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ, ஆதரவு அளித்தோ வாக்களிக்காமல் புறக்கணிப்பு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த நான்கு முறையும் தோல்வியில் முடிந்த போர் நிறுத்த தீர்மானங்கள், முதன்முறையாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் போர் நிறுத்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.