
பிப்ரவரி 19, வாஷிங்டன் (World News): அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், சிறப்பு விமானம் மூலம் அவர்களது தாய் நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் (US President Donald Trump) பதவியேற்ற பிறகு, அந்நாட்டில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் (Illegal Immigration) கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார். இதன் நடவடிக்கையில், அவர்களது கையில் கைவிலங்கும், காலில் சங்கிலி பூட்டியும் அமெரிக்கா நாடு கடத்தி வருகிறது. இதுவரை, 332 இந்தியர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். Bolivia Bus Crash: 800 மீட்டர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து.. 31 பேர் துடிதுடித்து பலியான சோகம்..!
அமெரிக்கா வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை:
இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்களை நாடு கடத்தும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், விமானத்தில் ஏற்றப்படும் சட்ட விரோத குடியேறிகளின் கைகளில் கைவிலங்கு மற்றும் கால்களில் சங்கிலி பூட்டப்பட்டுள்ளது. 41 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், புறப்பட தயாராக இருக்கும் விமானத்தில் சட்டவிரோதமக குடியேறியவர்கள் ஏற்றப்படுவதற்கு முன்பு கை மற்றும் கால்களில் சங்கிலி பூட்டப்படுகிறது. மேலும், அதிகாரிகள் ஒரு கூடையில் இருந்து சங்கிலியை எடுத்து சாலையில் தனித்தனியாக பிரித்து வைக்கும் காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது.
வீடியோ இதோ:
ASMR: Illegal Alien Deportation Flight 🔊 pic.twitter.com/O6L1iYt9b4
— The White House (@WhiteHouse) February 18, 2025