Bolivia Bus Crash (Photo Credit: @Mahakaal_22 X)

பிப்ரவரி 18, பொலிவியா (World News): தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் (Bolivia) நாட்டில், சுமார் 2625 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. யோகல்லாவின் (Yocalla) தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் இருந்து சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கிட்டத்தட்ட 800 மீட்டர் பள்ளத்தாக்கில் இருந்து கவிழ்ந்து கீழே விழுந்து விபத்து (Bus Accident) ஏற்பட்டுள்ளது. பேருந்தில் பயணித்த 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். Pope Francis: போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு; ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை.. மருத்துவ அறிக்கை வெளியீடு..!

31 பேர் பரிதாப பலி:

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 10 பெரியவர்கள் மற்றும் 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மலைப்பாதையில் திருப்பங்கள் நிறைந்த பாதையாக இருப்பதால், சிறிய தவறு நிகழ்ந்தாலும், பெரும் விபத்துக்கள் ஏற்படும். பேருந்தின் வேகம் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தார். மேலும், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: