Donald Trump (Photo Credit @BhaniR46816 X)

பிப்ரவரி 06, வாஷிங்க்டன் டிசி (World News): அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), 47 வது அமெரிக்க அதிபராக நேற்று முன்தினம் பதவியேற்றார். 45வது அதிபராக பணியாற்றியவர், 46 வது அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், 47வது அதிபர் தேர்தலில் களம்கண்டு வெற்றியடைந்து, மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர்கள், மூத்த தலைவர்கள், பிற நாட்டு அதிபர்கள் & பிரதமர்கள், தொழிலதிபர்கள் என பலர் முன்னிலையில் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ட்ரம்ப், அமெரிக்காவை மீண்டும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வேன் என வாக்குறுதி அளித்து இருக்கிறார். Sweden School Attack: பள்ளியில் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!

புதிய திட்டங்களின் அறிவிப்பு:

இதனிடையே, அமெரிக்க அரசு நிர்வாகத்தால் முடக்கப்பட்ட டிக் டாக் மீதான தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் டிக் டாக் செயலிக்கு புதிய நிபந்தனையுடன் வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதாவது, டிக் டாக் செயலியை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் வாங்க வேண்டும் என நிபந்தனை கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அமெரிக்க அரசு ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளார். மெக்சிகோ வளைகுடாவை (Gulf of Mexico) அமெரிக்க வளைகுடா (Gulf of America) எனப் பெயர் மாற்றியுள்ளார். அலாஸ்காவின் 2000 அடி மலைக்கு, 2015ம் ஆண்டு அதிபர் ஒபாமா டெனலி மலை என பெயர் சூடிய நிலையில் மெக்கென்லி மலை என்ற பழைய பெயரையே மீண்டும் சூட்டியுள்ளார். மேலும் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

மகளிர் விளையாட்டு போட்டிகளில் திருநங்கைகள் விளையாட தடை:

தேர்தல் பிரசாரங்களின்போதே டிரம்ப் மாற்று பாலினத்தவர்கள் குறித்து பேசியிருந்தார். நான் ஆட்சிக்கு வந்தால், ஆண் மற்றும் பெண் என்கிற இரண்டு பாலினங்கள்தான் இருக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பெண்கள் மற்றும் மகளிர் விளையாட்டுகளில் திருநங்கை விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதைத் தடை செய்யும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இதனால் திருநங்கைகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.