பிப்ரவரி 05, ஸ்டாக்ஹோம் (World News): ஸ்வீடன் நாட்டில், ஸ்டாக்ஹோமில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலையில் உள்ள ஓரேப்ரோ (Orebro) என்னும் இடத்தில் ரிஸ்பெர்க்ஸ்கா (Risbergska) என்ற பெயரில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், பள்ளி படிப்பை முறையாக முடிக்காத மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும். இந்நிலையில், பள்ளியில் நுழைந்த மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு (Gun Shot) நடத்தினார். இதில், 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். Job Alert: பிஎஸ்சி நர்சிங் படித்தவரா நீங்களா? நல்ல சம்பளத்தில் அரேபிய அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை.. விபரம் உள்ளே.!
பள்ளியில் துப்பாக்கிச்சூடு:
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மேலும், தாக்குதல் நடத்திய மர்ம நபரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, தாக்குதல் நடத்தியவர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார்? என்பது பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.