ஏப்ரல் 18, நியூ ஜெர்சி (World News): ஹைதராபாத் சேர்ந்த 20 வயது நிரம்பிய மாணவி மற்றும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த 22 வயது நிரம்பிய மாணவி, இருவரும் இணைந்து அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஷாப் ரைட் (ShopRite store) என்ற வணிக வளாகத்தில் பொருட்களை வாங்க சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சில பொருட்களினை திருடியுள்ளனர். அந்தக் காட்சியானது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனைப் பார்த்த காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அந்த இரு மாணவிகளையும் அவர்கள் கைப்பற்றினர். TN Weather Report: தமிழகத்தில் வெப்ப அலை வீசும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பின்னர் அதில் ஒரு மாணவி தான் எடுத்த பொருளுக்கு உரிய பணத்தை விட இரட்டிப்பான பணத்தை கொடுத்து விடுவதாகவும் தன்னை மன்னித்து விடுமாறும் கெஞ்சியுள்ளார். மற்றொரு மாணவியோ தான் இனிமேல் இந்த தவறினை செய்யவே மாட்டேன் என்று கேட்டுள்ளார். இருப்பினும் சட்ட விதிமுறையின் படி அமெரிக்க காவல்துறையினரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.