டிசம்பர் 09, ஒட்டாவா (World News): வட அமெரிக்க நாடான கனடாவில் (Canada) உள்ள எட்மான்டன் நகரில், இந்திய வாலிபர் ஹர்ஷன்தீப் சிங் (வயது 20) என்பவர் வசித்து வந்தார். இவரை மர்ம நபர்கள் சிலர் சுட்டுக்கொலை (Shot Dead) செய்தனர். இதுதொடர்பாக, கனடா நாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு, கனடாவில் உள்ள இந்திய தூதரகம் வருத்தம் தெரிவித்துள்ளது. Syria Civil War: சிரியாவில் திடீரென வெடித்த உள்நாட்டுப் போர்.. தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படையினர்.!
இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த டிசம்பர் 06-ஆம் தேதி எட்மண்டனில் இந்திய வாலிபர் ஹர்ஷன்தீப் சிங் மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். மாணவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரித்த கனடா காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். நாங்கள் தொடர்ந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என இந்திய தூதரகம் கூறியுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.