Kape Technologies (Photo Credit: Kape.com)

ஜூலை 31, லண்டன் (World News): ஐரோப்பாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் Kape Technologies. இந்நிறுவனம் சர்வதேச அளவில் இணையவழி குற்றத்தடுப்பு பாதுகாப்பு (Cyber Security) சேவையை வழங்கி வருகிறது.

கடந்த 2013ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், ஆஸ்டின், புர்சாரஸ்ட், ஹாங்காங், லண்டன், பாரிஸ், சிங்கப்பூர் உட்பட பல இடங்களில் தனது நிறுவனத்தை விரிவுபடுத்தியும் இருக்கிறது. இந்நிறுவனத்தில் 500 பேர் வரை வேலை பார்த்து வருகின்றனர். Bajaur Bomb Blast: பாஜவுர் பயங்கர குண்டு வெடிப்பு விவகாரம்; 42 பேர் பலி, 111 பேர் படுகாயம்.! அடுத்தடுத்து உயரும் பலி எண்ணிக்கை.!

இந்நிலையில், இந்நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி வந்த டான் கெரிக்கெ (Dan Gericke), நிறுவனத்தில் இருந்து சொந்த முடிவு காரணமாக விலகி இருக்கிறார்.

அதனைத்தொடர்ந்து, அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழில்நுட்ப குழுவை சேர்ந்த 200 பணியாளர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.