செப்டம்பர் 02, இங்கிலாந்து (World News): இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிட்ஜென்ட் (Bridgend) நகரை சேர்ந்த முன்னாள் காவல் அதிகாரி லீவிஸ் எட்வர்ட் (Lewis Edwards). 23 வயதாகும் இவர் கடந்த 2020 - 2023ம் ஆண்டுகளுக்கு இடையே சிறார்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 146 சிறார்களை மிரட்டி, ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சிறார்களின் 4500-க்கும் அதிகமான ஆபாச படங்கள் அவரின் செல்போனில் இருந்துள்ளது. கடந்த மே மாதம் லீவிஸின் இணையதள பயன்பாடு குறித்து கண்காணிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, 140 க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் தவறாக நடந்துகொண்டது அம்பலமானது. 10 வயதுள்ள சிறார்கள் முதல் தனது இச்சைக்கு அவர் பயன்படுத்தி இருக்கிறார். Jailer Amazon Release: ஜெயிலர் திரைப்படம் அமேசானில் வெளியாவது எப்போது?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே..!
தன்னிடம் சிக்கிய சிறார்களை வைத்து ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுப்பது, அதனை வைத்து மிரட்டுவது, பலாத்காரம் செய்வது என சைக்கோ போல நினைவில் தோன்றுவதை செய்து இருக்கிறார். எட்வர்டுக்கு எதிரான குற்றசாட்டுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய சவுத் வேல்ஸ் (South Wales) காவல் துறையினர், எட்வர்ட்டின் குற்றசாட்டுகளை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் உறுதி செய்தனர். பல சிறார்களும் தங்களுக்கு நடந்த அநீதியை பதைபதைப்புடன் வாக்குமூலமாக பதிவு செய்து சென்றனர்.
146 சிறார்களின் 23 குழந்தைகள் பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். எட்வர்டுக்கு எதிரான தீர்ப்பு அக் மாதம் 23ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். தற்போது எட்வர்ட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.