டிசம்பர் 29, டெக்ஸஸ் (World News): அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் (Texas) பகுதியில் நடந்த வாகன விபத்தில், இந்தியாவை பூர்வேகமாக கொண்ட குடும்பத்தினர் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. பதின்ம வயதுடைய நபர் காரை எதிர் திசையில் அலட்சியமாக இயக்கியதன் விளைவாக நடந்த வாகன விபத்து ஆறு பேரின் உயிரை பறித்துள்ளது.
எச்சரிக்கையை மீறி செயல்பட்டதால் விபரீதம்: முந்திச்செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கை சமிக்கை உள்ள இடத்தில், அலட்சியமக வாகனத்தை இயக்கிய காரணத்தால் விபத்து நடந்தது விசாரணையில் தெரியவந்தது. வேனில் பயணித்த குடும்பத்தினர், ஆபத்தான பகுதியில் மேற்கொண்ட அலட்சிய நடவடிக்கை, அவர்களின் உயிரை பறித்துள்ளது. Ayodhya Airport: அயோத்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வால்மீகி பெயர்; பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.. விபரம் இதோ.!
நொடியில் நடந்த விபத்தால் சோகம்: விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தான், இந்திய குடும்பம் உயிரிழந்தது தெரியவந்துள்ளளது. இவர்களில் உயிரிழந்தோர் ஜியார்ஜியா மாகாணத்தில் இருந்து அல்பர்ட்டா பகுதி நோக்கி சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது.
ஆந்திர எம்.எல்.ஏ உறவினர்கள் பலி: உயிரிழந்த நபர்கள் ருஷில் பாரி (வயது 28), நவீனா போட்டபதுல்லா (வயது 36), நாகேஸ்வர ராவ் பொன்னாடா (வயது 64), சீதா மகாலட்சுமி பொன்னாடா (வயது 60), கிர்த்திக் போட்டபதுல்லா (வயது 10), நிஷிதா போட்டபதுல்லா (வயது 9) என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒய்சிபி எம்எல்ஏ பொன்னாடா சதீஷ் உறவினர்கள் ஆவார்கள். விபத்து கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதுகுறித்த தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து அவர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர்.