ஜூன் 12, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டோம்பிவலி நகரில் உள்ள எம்ஐடிசி-யில் (MIDC) அமைந்துள்ள பொது வரையறுக்கப்பட்ட ரசாயன நிறுவனத்தில்(Chemical Factory), இன்று (ஜூன் 12) காலை 10 மணியளவில் பெரும் வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தீ விபத்து (Fire Accident) ஏற்பட்டது. கடந்த மூன்று வாரங்களில் இதுபோன்ற இரண்டாவது சம்பவமாகும். Black Sea Warning In Tamil Nadu: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை; இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவிப்பு..!
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தொழிற்சாலைக்குள் யாரேனும் உள்ளனரா என்று தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும், இந்த தீ விபத்து காரணமாக, அருகில் உள்ள அபினவ் பள்ளி மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. தீ மளமளவென பரவி வருவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் டோம்பிவிலி எம்ஐடிசி-யில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதில், 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்தோ-அமீன்ஸைச் சுற்றியுள்ள நிறுவனங்கள் உடனடியாக தங்கள் தொழிலாளர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றியுள்ளன. மேலும், வெடிகுண்டு வெடித்த இந்தோ-அமீன்ஸ் நிறுவனத்தில் தொழிலாளர்கள் யாராவது சிக்கி உள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ठाणे के डोंबिवली में MIDC इलाके में फिर एक फैक्ट्री में धमाके के बाद आग लगी. pic.twitter.com/bAaKtz0NLA
— Vivek Gupta (@imvivekgupta) June 12, 2024