ஜூலை 30, வாசிங்டன் (World News): அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் (Donald Trump) பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், இந்தியாவுக்கு 25% இறக்குமதி வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த வரிவிதிப்பு வரும் ஆகஸ்ட் 01ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜப்பானில் சுனாமி.. 2025 இயற்கை பேரழிவு குறித்து அன்றே கணித்த பாபா வங்கா.. அச்சத்தில் மக்கள்..!
டிரம்ப் வரி விதிப்பு:
இதுகுறித்து அவர் பதிவிட்ட சமூகவலைதளப் பக்கத்தில், 'இந்தியா நமது நண்பனாக இருந்தாலும், நாம் அவர்களுடன் ஒப்பீட்டளவில் குறைவான அளவிலேயே வணிகம் செய்து வருகிறோம். அவர்களின் வரிகள் மிக அதிகமாக உள்ளன. உலகிலேயே இந்தியாதான் மிக அதிகமான வரிவிதிக்கிறது. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியா கடுமையான பணமற்ற வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளது. மேலும், தங்கள் இராணுவ உபகரணங்களில் பெருமளவு ரஷ்யாவை சார்ந்துள்ளது எனவும், ரஷ்யாவுடன் நெருக்கமான உறவைப் பேணுவதாகவும்' அவர் குற்றம் சாட்டியுள்ளார்.