
பிப்ரவரி 11, வாஷிங்டன் (World News): இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, 2023ஆம் ஆண்டு அக்டோபர் 07ஆம் தேதி முதல் போர் துவங்கியது. அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகியவற்றின் கடும் முயற்சியால், போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. இதில், ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்துச்சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கவும், அதற்காக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். Guatemala Bus Accident: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. 51 பேர் பரிதாப பலி..!
அதிபர் டிரம்ப் எச்சரிக்கை:
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் (US President Donald Trump) கூறுகையில், அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளும் வருகின்ற சனிக்கிழமை 12 மணிக்குள் திரும்பி வராவிட்டால், அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்காமல், மொத்தமாக விடுவிக்கப்பட வேண்டும். என்னை பொறுத்தவரை சனிக்கிழமை 12 மணிக்குள் அனைவரும் திரும்ப அனுப்பப்பட வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் நரகத்திற்கு செல்வார்கள். இந்த காலக்கெடு குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவுடன் பேசுவேன் என அவர் கூறினார்.