Guatemala Bus Accident (Photo Credit: @globalbeaconn X)

பிப்ரவரி 11, கௌதமாலா (World News): மத்திய அமெரிக்காவில் உள்ள கௌதமாலாவில் (Guatemala) பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எல் ப்ரோக்ரெசோவில் உள்ள சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாட்டமாலா நகரத்திற்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் சென்றுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பேருந்து பாலத்தின் மீது சென்றுக்கொண்டிருந்த போது, சாலையோர தடுப்பின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் (Bus Accident) விழுந்தது. இந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். Road Accident: லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து; 41 பேர் உடல் கருகி பலியான சோகம்..!

பேருந்து கவிழ்ந்து விபத்து:

பேருந்தில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் சென்ற நிலையில், இடிபாடுகளில் இருந்து 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது. அதிகாலை நடைபெற்றதால், விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும், பேருந்தில் அதிக பயணிகள் பயணம் செய்ததன் காரணமா விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: