செப்டம்பர் 16, புளோரிடா (World News): அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசுக்கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே நடைபெறும் அரசியல், கருத்தியல் மோதல்களால் அமெரிக்காவே போட்டியின் கடினத்தன்மையை உணர்ந்து இருக்கிறது. தொடர்ந்து இருவரும் நேரடி விவாத நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களிடையே தங்களின் கருத்துக்களை முன்வைத்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களும் நடைபெறுகிறது. Realme P2 Pro 5G: அசத்தலான அம்சங்களுடன் ரியல்மி பி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் உள்ளே..!
பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிசூடு:
இதனிடையே, கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள புல்ட்டர் பகுதியில் நடைபெற்ற குடியரசுக்கட்சியின் பேரணியில் கலந்துகொண்ட ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இருந்து, அவர் நூலிழையில் உயிர்தப்பினார். அவர் பேசிக்கொண்டு இருக்கும்போது முகத்தை எதிர்பாராத விதமாக திரும்பியபோது, அவரின் காதுகளில் குண்டு துளைத்துச் சென்றது. இந்த விஷயம் உலகளவில் பெரும் கண்டனத்தையும் குவித்து இருந்தது.
மீண்டும் துணிகரம்:
இந்நிலையில், அங்குள்ள புளோரிடா மாகாணத்தில் இருக்கும் ட்ரம்புக்கு சொந்தமான கால்ப் மைதானத்தில், ட்ரம்ப் தனது கால்ப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ட்ரம்ப்-க்கு எந்த விதமான காயம் இல்லை எனினும், துப்பாக்கிசூடு நடத்திய நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரின் அடையாளமும் கண்காணிப்பு கேமிராக்கள் வாயிலாக அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது. சந்தேகத்திற்கு இடமானவர்கள் அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள்.
ட்ரம்ப்பை சுட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்:
🚨BREAKING: Officials on why President Trump did not have SS protection surrounding the golf course:" He isn't the sitting president" WTF! Inside job! THEY KEEP TRYING TO KlLL HIM.
DJT: "I am safe and well." Thank God!
The suspect is Ryan Wesley Routh. pic.twitter.com/TD2vWPfpAV
— AJ Huber (@Huberton) September 15, 2024