மார்ச் 11, கலிபோர்னியா (Cinema News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், ஹாலிவுட், டால்பி திரையரங்கில் வைத்து 2024ம் ஆண்டுக்கான 96வது (96th Oscars Award)ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓபன் ஹெய்மர், பார்பி, புவர் திங்ஸ், காட்ஸில்லா மைனஸ் ஒன் உட்பட பல படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை பெற்றன. உக்ரைன் - ரஷியா போரினை அடிப்படையாக கொண்டு உருவாகிய 20 டேஸ் இன் மரியுபோல் என்ற குறும்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை தட்டிச்சென்றது. இந்நிலையில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை சில்லியன் மர்பி தட்டிச்சென்றுள்ளார். ஓபன் ஹெய்மர் படத்தில் நடித்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஓபன் ஹெய்மர் திரைப்படம் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி, 21 ஜூலை 2023 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. இரண்டாம் உலக போரில் நடந்த விஷத்தை மையக்கருவாக கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது.
Best Actor in a Leading Role goes to Cillian Murphy! #Oscars pic.twitter.com/4BgQJpd6Ou
— The Academy (@TheAcademy) March 11, 2024