Parvathi Nair: நடிகை பார்வதி நாயரின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு; தேனாம்பேட்டை காவல்துறையினர் அதிரடி.. நடந்தது என்ன?.!

தி கோட் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை மீண்டும் வென்ற பார்வதி நாயர் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

Parvathi Nair: நடிகை பார்வதி நாயரின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு; தேனாம்பேட்டை காவல்துறையினர் அதிரடி.. நடந்தது என்ன?.!
Actress Parvathi Nair (Photo Credit: @igtamil X)

செப்டம்பர் 21, சென்னை (Chennai News): தென்னிந்திய திரைப்படங்கில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வருபவர் பார்வதி நாயர் (Parvathi Nair). மலையாள மொழியில் பெரிதும் அறியப்பட்ட பார்வதி நாயர், தமிழில் உத்தமவில்லன், மாலை நேரத்து மயக்கம், நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால் உட்பட பல படங்களில் நடித்து இருந்தார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான தி கோட் (The Greatest Of All Time The GOAT) திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

பணியால் மீது புகார்:

சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் தங்கியிருக்கும் நடிகை பார்வதி நாயர், கடந்த 2022ம் ஆண்டு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், "தனது வீட்டில் இருந்த லேப்டாப், நகை உட்பட ரூ.10 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் மாயமாகி இருக்கின்றன. அதனை வீட்டில் வேலை பார்த்து வந்த சுபாஷ் திருடி இருப்பதாக சந்தேகிக்கிறேன்" என கூறப்பட்டு இருந்தது. Brother Teaser: ஜெயம் ரவியின் ‘பிரதர்’.. டீசர் மற்றும் இசை நாளை வெளியீடு!

நீதிமன்றத்தில் மனுதாக்கல்:

இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, நடிகை பார்வதி நாயர், 7 பேருடன் சேர்ந்து தன்னை தாக்கியதாக சுபாஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடந்த நிலையில், சுபாஷின் தரப்பில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்யப்பட்டது.

நடிகை மீது வழக்குப்பதிவு:

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதி முதற்கட்ட விசாரணை நடத்திய நிலையில், சுபாஷ் அளித்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, தேனாம்பேட்டை காவல்துறையினர் நடிகை பார்வதி நாயர் உட்பட 7 பேரின் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.

(The above story first appeared on LatestLY on Sep 21, 2024 11:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).