
பிப்ரவரி 17, பெங்களூரு (Cinema News): கர்நாடக மாநிலம், பெங்களூருவில் (Bengaluru) மல்லத்தஹள்ளியில் வசிப்பவர் சரித் பாலப்பா (Charith Balappa). இவர், கன்னட சின்னத்திரை நடிகர் ஆவார். 'முட்டுலட்சுமி' என்ற சீரியலில் நடித்த பிரபலம் ஆனார். இவர், தெலுங்கிலும் நிறைய சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சரித் பாலப்பா மீது, பெங்களூரு அன்னபூர்னேஸ்வரி நகர் காவல்நிலையத்தில் 29 வயது இளம்பெண் ஒருவர், பிப்ரவரி 14ஆம் தேதி புகார் அளித்தார்.
பரபரப்பு புகார்:
அவர் அளித்த புகாரில், 'லவ் லவிகே' என்ற கன்னட சீரியல் படப்பிடிப்பு 2018ஆம் ஆண்டில் நடந்தது. அங்கு நான் சென்றபோது, சீரியல் நடிகர் சரித் பாலப்பாவுடன் எனக்கு அறிமுகம் ஆனது. எனது செல்போன் எண்ணை வாங்கி தினமும் பேசி பழகி வந்தோம். பின், இருவரும் காதலித்தோம். திருமணம் செய்வதாக கூறி என்னிடம் உல்லாசமாக இருந்தார். ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டு எனக்கு துரோகம் செய்துவிட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். Vishal at Kantara Temple: காந்தாரா தெய்வத்தின் அருளாசியை எதிர்நோக்கி விஷால்; பயபக்தியுடன் சாமி தரிசனம்.!
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை:
இந்நிலையில், திருமணத்திற்கு பின்னரும் என்னிடம் பேசினார். உல்லாசமாக இருக்க வரும்படி அழைத்தார். நான் மறுத்ததால், என்னை மிரட்டி தொடர்ந்து வற்புறுத்தி (Sexual Harassment and Blackmail) வந்தார். இதனால் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். அப்போது, காவல்நிலையத்திற்கு வந்து, இனி பிரச்னை செய்ய மாட்டேன் என்று எழுதி கொடுத்தார். இதனையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு மனைவியை விவாகரத்து செய்ததும், என்னை மீண்டும் சந்தித்தார். மீண்டும் காதலிப்போம், உடலுறவு வைத்து கொள்வோம் என்று என்னிடம் கூறினார். நான் அதற்கு மறுத்து விட்டேன்.
சீரியல் நடிகர் மீது வழக்குப்பதிவு:
இதனால், நாங்கள் இருவரும் காதலித்த போது எடுக்கப்பட்ட, எனது ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி, என்னிடம் இருந்து 5 கிலோ வெள்ளி பொருட்களை வாங்கினார். மேலும், தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது. இளம்பெண் அளித்த புகாரின்பேரில், சரித் பாலப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு டிசம்பரில், 29 வயது நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரிலும், சரித் பாலப்பா கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.