Zakir Hussain (Photo Credit: Wikipedia Commons)

டிசம்பர் 16, மும்பை (Cinema News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையைச் சேர்ந்த பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் ஹுசைன் (Zakir Hussain). இவர் தபேலா, தாள வாத்தியக்காரர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார். தபேலா இசையினால் தனது வாழ்க்கையை தொடங்கியவர், பல முன்னேற்றங்களையும் கண்டுள்ளார்.

இசை உலகின் நாயகன்:

குறிப்பாக மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதை 1990ம் ஆண்டிலும், சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப் விருதை 2018ம் ஆண்டிலும், ரத்னா சத்ஸ்யா விருதையும் பெற்றுள்ளார். கடந்த 1999 ல் பாரம்பரியமிக்க கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான கலை தேசிய பாரம்பரிய பெல்லோஷிப் யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் என்டோவ்மென்ட் விருதும் வழங்கப்பட்டது. கூடுதலாக ஏழு கிராமி விருது பரிந்துரைகளைப் பெற்றுள்ளார். பிப்ரவரி 2024ல் மூன்று கிராமி விருதுகளையும் பெற்றார். Good Bad Ugly: ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய குட் பேட் அக்லீ படத்தின் அப்டேட்; லீக்கான ஸ்டில்ஸ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! 

பத்மஸ்ரீ விருதுகள்:

கடந்த 1963ம் ஆண்டு முதல் தன்னை இசைக்காக அர்ப்பணிக்கத் தொடங்கியவர், தனது திறனால் முன்னேறி பல வெற்றிகளை கண்டுள்ளார். கிட்டத்தட்ட கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இசை கலைஞராக அவர் பணியாற்றி வந்துள்ளார். பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசை, ஜாஸ் ஃப்யூஷன், உலக இசை ஆகியவற்றில் இவர் கைதேர்ந்தவர் ஆவார்.

ஜாகிர் மறைந்தார்:

இதனிடையே, கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த ஜாகிர், நேற்று தனது மும்பை இல்லத்தில் உயிரிழந்தார். அவர் இதயம் தொடர்பான பிரச்சனையில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 60 ஆண்டுகளை கலைக்கு அர்ப்பணித்து வாழ்ந்தவரின் மறைவு, அவரின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, சர்வதேச அளவிலான இசை ரசிகர்களுக்கும் ஜாகிரின் மறைவு பேரிழப்பு என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.