Vidaa Muyarchi (Photo Credit: @LycaProductions X)

ஜனவரி 01, கோடம்பாக்கம் (Cinema News): முன்தினம் பார்த்தேனே, மீகாமன், தடம் உட்பட பல படங்களை இயக்கி வழங்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமாரின் ஆக்சன்-திரில்லர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி (Vidaamuyarchi). இப்படம் லைகா நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படுகிறது, அனிருத் ரவிச்சந்தர் இசையில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், என்.பி ஸ்ரீகாந்த் எடிட்டிங்கில் உருவாகி வரும் திரைப்படம், அஜர்பைஜான் உட்பட பல நாடுகளில் விறுவிறுப்புடன் படமாக்கப்பட்டு வந்தது.

படம் வெளியீடு தள்ளிச்செல்கிறது:

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று, படம் பொங்கல் 2025 பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் பிற தொழில்நுட்ப பணிகள் எஞ்சி இருப்பதால், படம் பொங்கல் 2025 க்கு வெளியாகாது என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் அஜித் குமாருடன் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் உட்பட பலரும் நடித்து இருக்கின்றனர். ரூ.300 கோடி செலவில் படம் தயாராகி இருக்கிறது.

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, தல ரசிகர்களுக்கு ஷாக் செய்தி கொடுத்த படக்குழு: