Good Bad Ugly (Photo Credit: @PrathyangiraUS X)

மார்ச் 13, வாஷிங்க்டன் டிசி (Cinema News): இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில், நடிகர்கள் அஜித் குமார், திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லீ (Good Bad Ugly). 10 ஏப்ரல் 2025 அன்று உலகளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் திரைப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை அபிநந்தன் ராமானுஜம், எடிட்டிங் பணிகளை விஜய் வேலுக்குட்டி மேற்கொண்டுள்ளனர். Actress Soundarya Death Case: நடிகை சௌந்தர்யா இறந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் திருப்பம்.. வில்லன் நடிகர் மீது பரபரப்பு புகார்..!

இந்திய நேரப்படி நள்ளிரவு வெளியாகிறது:

இந்நிலையில், அமெரிக்காவில் குட் பேட் அக்லீ படத்தின் வெயியீடு உரிமைகளை ப்ரத்யங்கிரா சினிமாஸ் (Prathyangira Cinemas) நிறுவனம் கைப்பற்றி இருந்தது. படத்தின் வெளியீடு உரிமையை கைப்பற்றியுள்ள நிறுவனம், அமெரிக்காவில் தமிழ் திரைப்படத்துக்காக புதிய சாதனை முயற்சியை முன்னெடுத்து இருக்கிறது. வழக்கமாக அமெரிக்காவில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு என நேரக்கபட்டுப்பாடு இருக்கும். குட் பேட் அக்லீ படத்துக்காக, படத்தின் வெளியீடு அமெரிக்காவில் முதலில் இருப்பதற்கான நடவடிக்கை எடுப்பட்டுள்ளன. அதற்கேற்ப காட்சி நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 09, 2025 அன்று, படத்தின் வெளியீடு அமெரிக்காவில் 11.30 காலை பிஎஸ்டி (இந்திய நேரப்படி ஏப்ரல் 10 அன்று அதிகாலை 12:30 மணி)-க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல் காட்சிக்கு அனுமதி 9 மணிக்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் படம் வெளியாகுவதற்குள், அமெரிக்காவில் 3 காட்சிகள் அடுத்தடுத்து திரையிடப்பட்டு இருக்கும்.

அமெரிக்காவில் குட் பேட் அக்லீ படம் வெளியீடு அறிவிப்பு: