
பிப்ரவரி 27, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம்வருபவர் ஜிவி பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா ஆகிய படங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்த ஜிவி பிரகாஷ், 2015ல் தொடங்கி 2025ம் ஆண்டுக்குள் 10 ஆண்டுகளுக்குள் 25 படங்களில் நடித்துவிட்டார். ஜிவி பிரகாஷின் 25 வது திரைப்படமான கிங்ஸ்டன் (Kingston Tamil Movie), 07 மார்ச் 2025 திரையரங்குகளில் வெளியாகிறது. Good Bad Ugly Teaser Update: குட் பேட் அக்லீ படத்தின் டீசர் நாளை வெளியீடு; ஆதிக் அறிவிப்பு.. முழு விபரம் உள்ளே.!
கிங்ஸ்டன் படக்குழு:
ஜீ ஸ்டுடியோஸ், பாரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் (Zee Studios & Parallel Universe Pictures) இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தை, கமல் பிரகாஷ் இயக்கி வழங்குகிறார். படத்தின் இசையமைப்பு பணிகளை ஜிவி பிரகாஷ், ஒளிப்பதிவு பணிகளை கோகுல் பினோய், எடிட்டிங் பணிகளை சான் லோகேஷ் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். படத்தில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி, சேட்டன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல், ஆண்டனி, அருணாச்சலேஸ்வரர், ராஜேஷ் பாலசந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் கதை சுருக்கம்:
மீனவர்களும், அவர்கள் நம்பும் ஒரு மர்மமும் என உருவாகியுள்ள கதையில், ஊர் மக்களின் எச்சரிக்கையை மீறி, அவர்கள் நம்பும் விஷயம் பொய் என நிரூபிக்க நாயகன் தனது தோழர்களுடன் கடலுக்குள் செல்கிறார். அவருக்கு என்ன நடந்தது? அவருடன் பயணித்த நபர்களின் எண்ணப்படி ஊர்மக்கள் கூறிய கருத்து உண்மையானதா? நாயகன் அதனை எதிர்கொண்டாரா? எதிர்கொண்டார் எனில், எப்படி மீண்டும் கரைசேர்ந்தார்? என்பது தொடர்பான காட்சிகளுடன் படம் அட்டகாசமாக உருவாகி வெளியாகியுள்ளது. இப்படம் ஜிவி பிரகாஷின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.