பிப்ரவரி 11, கோடம்பாக்கம் (Cinema News): ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷ்னல் தயாரிப்பில், இயக்குனர் பா. விஜய் இயக்கத்தில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், தீபக் குமார் பதாய் ஒளிப்பதிவில், சன் லோகேஷ் எடிட்டிங்கில் உருவாகியுள்ள திகில் காட்சிகள் நிறைந்த பேய் திரைப்படம் அகத்தியா (Aghathiyaa). திகில் காட்சிகள் நிறைந்த இப்படம், சுதந்திர காலகட்டத்தையும், தற்போதைய கால கட்டத்தையும் இணைத்து புதிய முயற்சியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதேபோல ஜாக்சன் துறை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
அகத்தியா படம் வெளியீடு தேதி (Aghathiyaa Release Date):
இப்படத்தில் திரையுலக பிரபலங்களான நடிகர்கள் ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜுன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, டத்தோ ராதா ரவி, எட்வர்ட் சொன்னன்பிலிக், மாட்யல்டா உட்பட பலரும் நடித்துள்ளனர். 28 பிப்ரவரி 2025 அன்று திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.