புதுமண தம்பதிகள் கவின் - மோனிகா டேவிட் வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் (Photo Credit: Instagram)

ஆகஸ்ட் 28, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அறிமுகமாகும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. சின்னத்திரையில் வெற்றிகாணும் நபர்களை மக்கள் அங்கீகரிக்க தொடங்கிவிட்டதால், அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக வெள்ளித்திரையில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

அந்த வகையில், சின்னத்திரையில் ஒளிபரப்பாகிய நெடுந்தொடரில் நடித்து தமிழக மக்களின் வரவேற்பை பெற்றவர் நடிகர் கவின். இவர் சின்னத்திரையின் பயணத்தை தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அவ்வப்போது தனக்கு வரும் படவாய்ப்புகளிலும் நடித்து வந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான தடா திரைப்படம் இளம் தலைமுறையிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை அடைந்தது. PM Distribute 51,000 Appointment Letters: 51 ஆயிரம் பணியாளர்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார் பிரதமர் மோடி; அசத்தல் நிகழ்வு இதோ.! 

இந்நிலையில், நடிகர் கவின் தனது காதலி மோனிகா டேவிட்டை சமீபத்தில் குடும்பத்தினர் சம்மதத்துடன் கரம்பிடித்தார். தற்போது அவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் புதுமண தம்பதிகளை நேரில் சென்று வாழ்த்தினார். நடிகர் சிவகார்த்திகேயனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் உட்பட பலரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று தமிழக மக்களின் அங்கீகாரத்தை பெற்ற நடிகர்களில் கவனிக்கத்தக்கவர்கள் ஆவார்கள். அதேபோல, பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு சென்ற நடிகர்களும் கவனிக்கப்படுகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by shruti (@lets.cinema_updates)