நவம்பர் 20, சென்னை (Astrology Tips): எண் கணிதத்தில் (Numerology) , புதனின் எண் 5. பொதுவாக ஒரு நிறுவனத்திற்கு பெயர் வைக்க 5 ஆம் எண் சிறப்பானதே. எந்த லக்னக்காரருக்கும் 5 ஆம் எண்ணில் பெயர் வைக்கலாம். ஆனால், திருமணத் தேதி எண் 5 இல் இருக்கக் கூடாது. அதாவது 5, 14, 23 ஆகிய தேதிகளில் திருமணம் செய்வது சிறப்பன்று. அதே போல், நாள், மாதம், வருடம் மூன்றையும் கூட்டி வரும் எண் ஒற்றை இலக்கத்தில் 5 ஆக இருக்கக் கூடாது.
உதாரணமாக, 12-12- 2024 அன்று ஒரு திருமண நாள் குறிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது எல்லா எண்களையும் கூட்ட வேண்டும்.
1+2+1+2+2+0+2+4=14
மீண்டும் ஒற்றை இலக்கம் வரும் வரை கூட்ட வேண்டும்.
1+4=5
இந்த தேதியில் திருமணம் குறிப்பது நல்லதல்ல. World Children's Day 2024: "இந்த உலகத்தை ஒளிரச் செய்யும் ஒளி நீங்கள்.." குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்..!
அதற்கு அடுத்த நிலையாக, கேதுவின் எண்ணான 7 ஆம் எண்ணையும், ராகுவின் எண்ணான, 4 ஆம் எண்ணையும் தவிர்க்கவும். நாள் எண் 3 ஆக அமைந்து, நாள், மாதம், வருடம் மூன்றையும் கூட்டி வர 5 வந்தால் பிரச்சனைகள் இருந்தாலும் திருமண வாழ்க்கை ஓரளவிற்கு நீடித்து விடும்.
உதாரண திருமண நாள் 21-12-2024
இதில் நாள் எண் 3. எல்லா எண்களையும் கூட்டினால் 2+1+1+2+2+0+2+4=14
மீண்டும் கூட்ட 1+4=5.
இந்த தேதியில் திருமணம் செய்தவர்கள் ஓரளவுக்கு சமாளித்து கடைசி வரை ஒன்றாக வாழ்ந்து விடுவார்கள் எனலாம்.
இரண்டு எண்களுமே 5, 7, 4 இல் வந்தால் பிரச்சினைகள் அதிகம் இருக்கும் எனலாம். இந்த திருமணம் செய்தவர்களின் ஜாதகத்தில், இரண்டாம் வீடும், ஏழாம் வீடும் கெட்டிருப்பதை பார்த்திருக்கிறேன். எனினும், ஜாதக ரீதியாக முகூர்த்த நாளையும், முகூர்த்த நேரத்தையும் இருவரின் ஜாதகங்களை வைத்து குறிப்பது தான் மிகவும் முக்கியம். அதே சமயம், திருமண நாள் எண் கணிதப்படியும் பொருந்தி வந்தால் மிகவும் சிறப்பு எனலாம்.