செப்டம்பர் 09, மும்பை (Cinema News): தென்னிந்திய சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால் (Kajal Aggarwal). இவர் திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் படங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டார். தற்போது இந்தியன் 3 திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ள நிலையில், ராமாயணம் படத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். Nanjil Vijayan: 'பாலியல் ரீதியாக பயன்படுத்தி தூக்கி எறிந்துவிட்டார்' - நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை நடிகை பரபரப்பு புகார்.!
காஜல் அகர்வால் மரணம்?
திருமணம் முடிந்த பின் குழந்தை பிறந்து, மீண்டும் அவர் சினிமாவில் பழைய பாணியில் நடிக்க தொடங்கியுள்ளார். தினமும் உடற்பயிற்சி செய்தும், உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தும் உடலை மெருகேற்றி வருகிறார். இதனிடையே நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி கவலைக்கிடமான வகையில் இருப்பதாகவும், உயிரிழந்துவிட்டதாகவும் சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது.
காஜல் அகர்வால் வலைப்பதிவு:
இந்த விஷயத்திற்கு பதில் அளித்துள்ள காஜல் அகர்வால், தனது எக்ஸ் பக்கத்தில் தான் நலமாக இருப்பதாகவும், எனக்கு எந்த ஒரு விபத்தும் நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், உண்மைக்கு மாறான செய்திகளை அதிகம் பரப்ப வேண்டாம். கடவுளின் அருளால் நான் நன்றாகவே இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பாதுகாப்பாக இருக்கிறேன். போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.